ICC T20 கிரிக்கெட் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு – அக்.24 இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த ஆண்டுக்கான T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமனில் வைத்து அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை
கிரிக்கெட் விளையாட்டு உலகில் முக்கியமான போட்டியாக கருதப்படும் ICC T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் வைத்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தங்களது பயிற்சிகளை ஏற்கவே துவங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் தற்போது ICC T 20 போட்டிகள் நடைபெறும் அட்டவணை இன்று (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது. அதன் படி அக்டோபர் 17 ஆம் தேதி அன்று துவங்கும் முதல் போட்டியானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது.
ஆப்கனில் உள்ள இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
இப்போட்டியின் முதல் சுற்று குழு B உடன் ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதையடுத்து குழு B இல் உள்ள மற்ற அணிகளான ஸ்காட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 18 ஆம் தேதி அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை மற்றும் நமீபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் முதல் சுற்று போட்டிகள் அபுதாபியில் அக்டோபர் 22 வரை நடைபெறும்.
தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அக்டோபர் 23 ஆம் தேதி முதல் துவங்கும் போட்டியின் சூப்பர் 12 நிலைக்குச் செல்லும். சூப்பர் 12 நிலை அல்லது போட்டியின் இரண்டாம் சுற்றை பொருத்தளவு, அக்டோபர் 23 ஆம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும். இதனைத் தொடர்ந்து துபாயில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான போட்டிகள் மாலை துவங்கும். மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் துபாயில் அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது.
நவம்பர் 6 ஆம் தேதி அபுதாபியில் வைத்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டிகளும், ஷார்ஜாவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிகளுடனும் இந்த குழு நிறைவடையும். இதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடும் மோதலுடன் தொடங்கும் குரூப் 2 க்கான போட்டிகள் அக்டோபர் 24 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு துபாயில் நடைபெறும். இதையடுத்து பாகிஸ்தான் அணி அக்டோபர் 26 அன்று ஷார்ஜாவில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
TN Job “FB
Group” Join Now
தொடர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணி ஷார்ஜாவில் தனது ஆட்டத்தை முதல் சுற்றில் இருந்த குழு B இன் வெற்றியாளர்களுடன் தொடங்குகிறது. போட்டியின் முக்கியமான தருணமான முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10 அன்று, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அபுதாபியில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி நவம்பர் 11 அன்று துபாயில் துவங்கும். இதை தொடர்ந்து ICC உலகக்கோப்பையை சொந்தமாக்கும் அணிகளுக்கான இறுதி போட்டி நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். துபாயில் நடைபெறும் இப்போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஒளிபரப்பாகும்.