10, 12ம் வகுப்புகளுக்கு ஐசிஎஸ்இ & ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியீடு – வாரியம் அறிவிப்பு!
தமிழ்கத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட போவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பொது தேர்வுகளும், சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகளும் , கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொது தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இதனை இரண்டு பருவ தேர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலை தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்கப்பட்டு நேரடி முறையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் பொது தேர்வு கட்டாயமாக நேரடி முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள், திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
இந்த நிலையில் கடந்த ஆண்டு 10ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ தேர்வுகளும், ஐசிஎஸ்இ தேர்வுகளும் 12ம் வகுப்புக்கான ஐஎஸ்சி தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் மே மாதம் 7ம் தேதி அன்று வெளியிடப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனை http://cisce.org என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.