ஐசிசி உலககோப்பை 2023 – களைகட்டும் டிக்கெட் விற்பனை! முக்கிய வழிமுறை வெளியீடு!
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியை நடப்பு ஆண்டு இந்தியாவில் நடத்த உள்ளது. அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் ஐசிசி உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு – மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
இதனால் குறிப்பிட்ட நாட்களுக்கான போட்டிகளுக்கு என்று ஐசிசி தனித்தனியாக டிக்கெட் விற்பனைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை www.icc-cricket.com என்ற இணையதளத்தில் சென்று அக்டோபர் 15ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட்களுக்கான விவரங்களை ஐசிசியின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும் இணையதளம் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் அதற்கான ரசீதை நேரடியாக ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், ரசீது கையில் இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.