10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு – ஜன.10 கடைசி நாள்!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு - ஜன.10 கடைசி நாள்!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு - ஜன.10 கடைசி நாள்!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு – ஜன.10 கடைசி நாள்!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் டெக்னீசியன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10ம் தேதி கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் (ICAR) காலியாக உள்ள டெக்னீசியன் (IARI) பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

பணி: டெக்னீசியன் (Technician)

காலியிடங்கள்: 641

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 10.1.2022 தேதிப்படி 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC க்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.1000. SC/ST, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி வழித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு கிடையாது.

தேர்வு முறை: இந்த தேர்வு பொது அறிவு – 25 மதிப்பெண், கணிதம் – 25 மதிப்பெண், அறிவியல் – 25 மதிப்பெண், சமூக அறிவியல் – 25 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 1.30 மணி நேரம் என்ற கால அளவில் நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இடம்பெறும். மேலும் நெகட்டிவ் மார்க் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74856/Instruction.html என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2022

இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!