CA ஜூலை மாத தேர்வர்கள் கவனத்திற்கு – ICAI முக்கிய அறிவிப்பு!

0
CA ஜூலை மாத தேர்வர்கள் கவனத்திற்கு - ICAI முக்கிய அறிவிப்பு!
CA ஜூலை மாத தேர்வர்கள் கவனத்திற்கு - ICAI முக்கிய அறிவிப்பு!
CA ஜூலை மாத தேர்வர்கள் கவனத்திற்கு – ICAI முக்கிய அறிவிப்பு!

2021 ஜூலை மாத CA தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களின் உறவினரான தாத்தா, பாட்டி, மனைவி, குழந்தைகள் அல்லது உடன்பிறப்புகள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்வில் இருந்து விலகும் வாய்ப்பை ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது.

2021 CA ஜூலை மாத தேர்வு:

நடப்பு ஆண்டின் CA படிப்பிற்கான இடைநிலைத் தேர்வுகள் மே 22ம் தேதியும், இறுதி தேர்வுகள் மே 21ம் தேதியும் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு வாபஸ், இயல்பு நிலைக்கு திரும்பிய மாநிலம் – பொதுமக்கள் நிம்மதி!

இந்நிலையில் மே 26ம் தேதி இடைநிலை தேர்வுக்கான (ஐபிசி) பழைய திட்டம் , இடைநிலை புதிய திட்டம், இறுதித்தேர்வு பழைய மற்றும் புதிய திட்டம் மற்றும் பொது பாடப்பிரிவினருக்கான, காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை (ஐஆர்எம்) தொழில்நுட்ப தேர்வு மற்றும் சர்வதேச வரிவிதிப்பு தேர்வுகள் 2021 ஜூலை 5 தேதி முதல் உலகம் முழுவதும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஐ.சி.ஏ.ஐ ஆணையம், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி, மனைவி, குழந்தைகள் அல்லது உடன்பிறப்புகள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு ஒரே வீட்டில் வசிக்கும் நிலை இருந்தால் அவர்கள் தேர்வில் இருந்து விலகும் வாய்ப்பை அறிவித்துள்ளது. இவர்களுக்கு நவம்பர் மாத தேர்வில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் இருந்து விலக விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் தேர்வு ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளபடி, கோவிட் -19 நேர்மறை ஆர்.டி.பி.சி.ஆர் அறிக்கை, ஆதார் அட்டை மற்றும் சுய அறிவிப்பு படிவம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தால் வழங்கப்பட்ட கோவிட் -19 நேர்மறை ஆர்.டி.பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது முக்கியமாகும்.
  • இந்த அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆய்வகத்திலிருந்து ஐ.சி.ஏ.ஐ சரிபார்க்கும். அறிக்கை பொய்யானதாக இருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது.

தேர்வின் முக்கிய விவரங்கள்:

  • மே / ஜூலை 2021 தேர்வு சுழற்சியில் இருந்து விலகும் விண்ணப்பதாரர்கள் நவம்பர் 2021 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • இறுதி மற்றும் இடைநிலை (ஐபிசி) தேர்வுகளுக்கான பழைய பாடத்தின் கடைசி வாய்ப்பு நவம்பர் 2021 தேர்வுக்கு நீடிக்கப்படுகிறது.
  • தேர்வின் இடையில் மாணவர்கள் விலகினால் மீண்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!