IBPS வங்கி தேர்வு முடிவுகள் – வெளியீடு !
IBPS நடத்திய Specialist Officer தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IBPS |
பணியின் பெயர் | Specialist Officer |
பணியிடங்கள் | 1828 |
தேர்வு தேதி | 26.12.2021 |
IBPS SO தேர்வு முடிவுகள்:
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சமீபத்தில் Specialist Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் 1828 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் Specialist Officer பணிக்கான முதற்கட்ட தேர்வானது 26.12.2021ம் தேதி நடத்தப்பட்டது.
தற்போது IBPS Specialist Officer பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதில் தேர்வானவர்கள் இரண்டாம் கட்ட தேர்வு எழுத தகுதியானவர்கள். கொரோனா தாக்கம் பரவலாக காணப்படுவதால் Mains தேர்வு தாமதமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.