IBPS வங்கி வேலைவாய்ப்பு 2022 – 6035 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி நாள் !

0
IBPS வங்கி வேலைவாய்ப்பு 2022 - 6035 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி நாள் !
IBPS வங்கி வேலைவாய்ப்பு 2022 - 6035 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி நாள் !
IBPS வங்கி வேலைவாய்ப்பு 2022 – 6035 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி நாள் !

நாடு முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐபிபிஎஸ் தேர்வை நடத்தி வருகிறது. அதன் படி, 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. IBPS கிளார்க் தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் Clerk பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். விண்ணப்ப செயல்முறை, பாடத்திட்டம், தேர்வு முறை, காலியிடம், தகுதி அளவுகோல்கள், தேர்வு செயல்முறை, சம்பளம் மற்றும் தேர்வின் பிற விவரங்களைப் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலியிடங்களுக்கான விரிவான விளம்பரம் ஜூன் 30 அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான வங்கி மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. IBPS கிளார்க் CRP XII அறிவிப்பின் மூலம் மாநில வாரியாக 6035 IBPS கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளன, அதாவது 1089 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

ஒரு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். IBPS கிளார்க் 2022 ஆட்சேர்ப்பில் பங்கேற்கும் வங்கிகளின் மொத்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, UCO வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர் 20 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதார்கள் 02.07.1994க்கு முன்னும், 01.07.2002க்கு பின்னும் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் உட்பட). விண்ணப்பதார்கள் Online Preliminary Examination மற்றும் Online Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!