இந்திய சுரங்க பணியகத்தில் ரூ.2,09,200/- வரை ஊதியத்தில் வேலை..!

0
இந்திய சுரங்க பணியகத்தில் ரூ.2,09,200/- வரை ஊதியத்தில் வேலை..!
இந்திய சுரங்க பணியகத்தில் ரூ.2,09,200/- வரை ஊதியத்தில் வேலை..!
இந்திய சுரங்க பணியகத்தில் ரூ.2,09,200/- வரை ஊதியத்தில் வேலை..!

07.05.2022 அன்று இந்திய சுரங்க பணியகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Administrative Officer And Senior Administrative Officer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bureau Of Mines (IBM)
பணியின் பெயர் Chief Administrative Officer And Senior Administrative Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022 (Within 60 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய சுரங்க பணியகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய சுரங்க பணியகத்தில் Chief Administrative Officer, Senior Administrative Officer பணிக்கு என 04 பணியிடங்கள் Secretarial Officer காலியாக உள்ளது.

CAO, SAO கல்வி தகுதி:

CAO, SAO பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

CAO பணிக்கு அரசு நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் Level-11 (Rs. 67700-208700) என்கிற ஊதிய அளவில் குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

SAO பணிக்கு அரசு நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் Level-10 (Rs.56100-177500) என்கிற ஊதிய அளவில் குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CAO, SAO அனுபவ விவரம்:

Chief Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் Administration, Establishment, Accounts, Budget, Disciplinary Cases, Purchase of stores Matters போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் Accounts, Administration, Establishment, Budget, Disciplinary Cases, Purchase of Stores Matters போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

CAO, SAO வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுரங்க பணியகம் ஊதியம்:

Chief Administrative Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 12 படி குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Senior Administrative Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 படி குறைந்தபட்சம் ரூ.67,700/– முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
IBM தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 06.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here