புலனாய்வு பணியகத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – 150 காலிப்பணியிடங்கள் !

0
புலனாய்வு பணியகத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை - 150 காலிப்பணியிடங்கள் !
புலனாய்வு பணியகத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை - 150 காலிப்பணியிடங்கள் !
புலனாய்வு பணியகத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – 150 காலிப்பணியிடங்கள் !

புலனாய்வு பணியகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Assistant Central Intelligence Officer Grade –II/Tech பணிக்கு என மொத்தமாக 150 இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும். கல்வி தகுதி, வயது, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே அனைவருக்கும் எளிதில் புரியுமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Intelligence Bureau (IB)
பணியின் பெயர் Assistant Central Intelligence Officer Grade –II/Tech
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
புலனாய்வு பணியகம் பணியிடங்கள்:

புலனாய்வு பணியகத்தில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer Grade –II/Tech பணிக்கு 150 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Computer Science & Information Technology – 56
  • Electronics and Communication – 94
IB கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Electronics /Electronics, Telecommunications /Electronics, communication/Electrical, Electronics/Information Technology/Computer science/computer Engineering போன்ற பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் B.E, B.Tech, Master Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IB வயது விவரம்:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது எனவும் IB-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பணியகம் ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 7 படி குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

புலனாய்வு பணியகம் தேர்வு முறை:

விண்ணப்பதாரர் GATE Score மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

Short List செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

புலனாய்வு பணியகம் விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST பிரிவினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர் விண்ணப்ப கட்டணத்தை 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் செலுத்த வேண்டும்.

IB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை கடைசி நாளுக்குள் (07.05.2022) பதிவு செய்ய வேண்டும். சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!