IB நிறுவனத்தில் 700+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,51,100/- வரை ஊதியம் பெற வாய்ப்பு !

0
IB நிறுவனத்தில் 700+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,51,100/- வரை ஊதியம் பெற வாய்ப்பு !
IB நிறுவனத்தில் 700+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,51,100/- வரை ஊதியம் பெற வாய்ப்பு !
IB நிறுவனத்தில் 700+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,51,100/- வரை ஊதியம் பெற வாய்ப்பு !

புலனாய்வுப் பணியகம் (IB) வெளியிட்ட அறிவிப்பில் ACIO-I, II / Exe, JIO-I, II/ Exe, JIO-I, II/ MT போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 766 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் Intelligence Bureau (IB)
பணியின் பெயர் ACIO-I, II / Exe, JIO-I, II/ Exe, JIO-I, II/ MT and Others
பணியிடங்கள் 766
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

புலனாய்வு பணியகம் காலிப்பணியிடங்கள்:

புலனாய்வு பணியகத்தில் (IB) ACIO-I, II / Exe, JIO-I, II/ Exe, JIO-I, II/ MT, SA / Exe, Halwai-cum-Cook, Caretaker போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 766 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

ACIO-I / Exe – 70

ACIO-II / Exe – 350

JIO-I / Exe – 50

JIO-II / Exe – 100

SA / Exe – 100

JIO-I / MT – 20

JIO-II / MT – 35

SA / MT – 20

JIO-II / Tech – 07

Halwai-cum-Cook – 09

Caretaker – 05

புலனாய்வு பணியகம் கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

புலனாய்வு பணியகம் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பதவிகளில் அல்லது ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Intelligence Bureau வயது வரம்பு:

இந்த புலனாய்வு பணியகத்தின் (IB) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 56 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Intelligence Bureau ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் அளவுகளில் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ACIO-I / Exe பணிக்கு ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும்,
  • ACIO-II / Exe பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • JIO-I / Exe பணிக்கு ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை என்றும்,
  • JIO-II / Exe பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • SA / Exe, JIO-II / MT, SA / MT, Halwai Cum Cook பணிகளுக்கு ரூ. 21,700/- முதல் ரூ.69,100/- வரை என்றும்,
  • JIO-I / MT பணிக்கு ரூ. 25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • JIO-II / Tech பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Caretaker பணிக்கு ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Intelligence Bureau தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intelligence Bureau விண்ணப்பிக்கும் முறை:

இந்த புலனாய்வு பணியக பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (21.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IB Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!