அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும், காதலை சொல்ல கொஞ்ச நாள் தேவைப்படும் – பாவனி ஓபன் டாக்!

0
அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும், காதலை சொல்ல கொஞ்ச நாள் தேவைப்படும் - பாவனி ஓபன் டாக்!
அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும், காதலை சொல்ல கொஞ்ச நாள் தேவைப்படும் - பாவனி ஓபன் டாக்!
அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும், காதலை சொல்ல கொஞ்ச நாள் தேவைப்படும் – பாவனி ஓபன் டாக்!

பாவனியும் அமீரும் சேர்ந்து தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடி கொண்டிருக்கின்றனர். அமீரை பாவனி காதலிக்கிறாரா என பலரும் சந்தேகப்பட்டு கொண்டிருந்த வேளையில் அமீரை பற்றி பாவனியே ஓப்பனாக கூறியுள்ளார்.

அமீர் – பாவனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்னத்தம்பி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் பாவனி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதே பிக் பாஸ் சீசன் மூலமாக தான் அமீரும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் அமீர் வந்ததில் இருந்து பாவனியுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையிலேயே சந்தித்து பேசி வந்ததால் இருவரும் காதலிக்கிறார்களோ என்கிற சந்தேகம் இருந்தது.

Exams Daily Mobile App Download

இதற்கு இடையில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் வதந்தியை மேலும் அதிகப்படுத்தியது. அமீரிடம் நீங்கள் பாவனியை காதலிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. நான் பாவனியை காதலிக்கிறேன் ஆரம்பத்தில் பாவனியுடன் நட்பாய் மட்டுமே பழகி வந்தேன். பின்பு பாவனி மீது காதல் வந்துவிட்டது. பாவனி ஒத்துக்கொள்ளும் வரைக்கும் காத்திருப்பேன் என கூறியிருந்தார். பாவனியிடம் அமீரின் காதல் பற்றி கேட்ட போது எனக்கு அமீர் நல்ல நண்பன் மட்டுமே என கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் கூட இருவரும் சேர்ந்தே வெளியூர் பயணம் மேற்கொண்டனர்.

பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ!

தற்போது அமீரும் பாவனியும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தூள் பறக்க செய்து கொண்டிருக்கின்றனர். இருவரின் நடனத்தையும் பார்த்து ரம்யா கிருஷ்ணனே மெய் சிலிர்த்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாவனி அமீரை குறித்து பேசியுள்ளார். அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமீர் மீது எனக்கு காதல் இருக்கிறதா என்று கேட்டால் அதை சொல்ல கொஞ்சம் நாள் தேவைப்படும் என கூறியுள்ளார். மேலும், வேலை என்று வந்துவிட்டால் அமீர் மிகவும் கறாராக நடந்துகொள்வார் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!