தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்ப பெறும் முறை – முக்கிய தகவல்கள்!

0
தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்ப பெறும் முறை - முக்கிய தகவல்கள்!
தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்ப பெறும் முறை - முக்கிய தகவல்கள்!
தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்ப பெறும் முறை – முக்கிய தகவல்கள்!

தவறுதலாக நாம் அனுப்ப வேண்டிய கணக்கை தவிர்த்து மற்ற வங்கி கணக்கிற்கு நமது பணத்தை அனுப்பி விட்டால், அதனை எவ்வாறு திரும்ப பெற முடியும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் வங்கி சேவை:

பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வங்கி சேவை வேண்டும் என்றாலும் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு வாடிக்கையாளர் நேரடியாக வங்கி சென்று தான் அந்த சேவையை பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ONLINE BANKING மூலம் வங்கிகள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து, நமக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது. இணைய வங்கி சேவை, மூலமாக ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யலாம்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை!

மொபைல் ரீசார்ஜ், பில் செலுத்துதல், தொடர் வைப்பு நிதி கணக்கை தொடங்குவது மற்றும் நிரந்திர வைப்பு நிதி கணக்கை திறத்தல் இதுபோன்ற இன்னும் பல சேவைகளை இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம். இந்த சேவையின் மூலமாக நன்மைகள் உள்ளது போல், தீமைகளும் உள்ளது. வங்கியின் கணக்குகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். நமது கவனக்குறைவினால் மட்டுமே தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பணத்தை ஏதேனும் தவறான கணக்கிற்கு மாற்றினால் அதற்காக கவலை அடைய தேவையில்லை.

பணத்தை தவறான கணக்கிற்கு செலுத்தியது தெரிந்தவுடன் முதலில் நமது வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை மையத்தில் முழு விவரங்களையும் அறிவிக்க வேண்டும். வங்கிக்கு அதிகாரபூர்வமாக மின்னஞ்சல் அனுப்பும் படி கேட்கப்பட்டால் அதனை அனுப்ப வேண்டும். பரிவர்த்தனை தேதி மற்றும் நேரம், உங்கள் கணக்கு எண் மற்றும் பணம் மாற்றப்பட்ட கணக்கு எண் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால் தானாகவே உங்கள் கணக்கிற்கு செலுத்தப்படும்.

ENG vs IND 5வது டெஸ்ட் – தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?

செயல்பாட்டில் உள்ள கணக்கிற்கு பணம் தவறுதலாக செலுத்தப்பட்டால், வங்கி கிளையின் மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த தவறுதலாக அனுப்பப்பட்ட கணக்கின் உரிமையாளரிடம் இது பற்றி தெரிவித்து நமது பணம் திரும்ப செலுத்தப்படும். ஆனால் இந்த செயல்முறைக்கு சில நேரங்களில் மாத கணக்கில் கூட காலம் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!