ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – போன் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - போன் நம்பரை அப்டேட்
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - போன் நம்பரை அப்டேட்

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – போன் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவை பொறுத்த வரையில் இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது ஒரு  தனி மனிதனின் முக்கியமான ஆவணமாகும். எனவே ஆதார் தொடர்பான ஒவ்வொரு தகவலையும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இது குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஆதார் கார்டு:

இந்திய நாட்டை பொறுத்த வகையில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் ஒன்றாக ஆதார்  கார்டு வந்து விட்டது. ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு மட்டுமே பயன்படுகிறது.

TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது மிக முக்கியமானது. உண்மையில், இன்றைய காலகட்டத்தில் பலரிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல் எண்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஆதார் அட்டையுடன் எந்த எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும். சில நேரங்களில் சில காரணங்களால் புதிய மொபைல் நம்பர் வாங்க வேண்டியிருக்கும். அந்த நம்பரை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக கண்டறியலாம்.

இதற்கு, முதலில் நீங்கள் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.inக்கு செல்லவும். ‘my aadhaar’ பிரிவில் கிளிக் செய்து, ஆதார் சேவையின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். Verify an Aadhaar Number here என்ற வசதியில் தங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, சரிபார்ப்பதற்கு செல்லவும். இங்கே தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்கள் தோன்றும். எந்த எண்ணும் இணைக்கப்படவில்லை என்றால், எண்கள் இங்கு தோன்றாது.இவ்வாறு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!