WhatsApp இல் மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ!

1
WhatsApp இல் மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ!
WhatsApp இல் மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ!
WhatsApp இல் மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ!

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு மொபைல் எண்ணை சேமிக்காமலேயே மெசேஜ் செய்யும் வசதி உள்ளது. அதனை எவ்வாறு செய்வது என இப்பதிவில் காணலாம்.

WhatsApp ட்ரிக்:

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டு உள்ள ஊரடங்கால் பலரும் வீட்டினுள்ளே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. மேலும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. தற்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள எவருக்கும் அவர்களின் எண்ணைச் சேமிக்காமல் மெசேஜ் அனுப்ப முடியும்.

தமிழக அரசின் பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

பொதுவாக நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்பினால், மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது அவசியம். இணையத்தில் உள்ள சில பயன்பாடுகள் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப அனுமதிக்கின்றன. ஆனால் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவது சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்யக்கூட வழிவகுக்கும்.

  • உங்கள் தொலைபேசியில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxx என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
  • ‘xxxxxxxxx’ க்கு பதிலாக, நீங்கள் உங்கள் நாட்டின் குறியீட்டோடு தொலைபேசி எண்ணையும் உள்ளிட வேண்டும், எனவே நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண் +919911111111 எனில், http://wa.me/919911111111 ஆக மாற்ற வேண்டும்.
  • அடுத்து, மொபைல் எண் மற்றும் வாட்ஸ்அப் லோகோ காமிக்கும். அதனை கிளிக் செய்த உடன் உங்கள் வாட்ஸ்அப் செயலி திறக்கும்.
  • அதன் மூலம் அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப இயலும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!