வங்கி ATM களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் எப்படி மாற்றுவது?

0
வங்கி ATM களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் எப்படி மாற்றுவது?
வங்கி ATM களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் எப்படி மாற்றுவது?
வங்கி ATM களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் எப்படி மாற்றுவது?

வாடிக்கையாளர்கள் ATM இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுகளை பெற்றால் அதற்கான மாற்று வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த வழிகளை பின்பற்றி வங்கி கிளைகளில் ரூபாய் நோட்டுகளை புதிதாக பெற்றுக் கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகள் மற்றம்:

தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பலரது மாத சம்பளம் முதல் வருமானங்கள் வரை வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்படுகின்றன. அந்த பணத்தை நாம் தேவைப்படும் போது ATM இயந்திரங்கள் மூலமாக எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் நாம் ATM மூலம் பணம் எடுக்கும் போது சில அசவுகரியமான நிகழ்வுகள் ஏற்படுவது உண்டு. ஒவ்வொரு நாளும் ATM தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்து கொண்டு இருக்கின்றன. என்னதான் ATM தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டதாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பணிக்கு தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்!

பொதுவாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் ATM களில் பணம் எடுக்கும்போது, பணம் வெளியே வராத நிலைமைகளை கடந்து வந்திருப்பார்கள். சில நேரங்களில் அத்தகைய சிக்கல்கள் ஏற்படும் போது உங்கள் அக்கவுண்டில் அந்த பணம் கழிக்கப்படும். ஆனால் சில சமயங்களில் ATM மெஷின்களில் செல்லாத ரூபாய் நோட்டுகளும் கிடைப்பதாக புகார்கள் சொல்லப்படுகிறது. தற்போதெல்லாம் ATM மெஷின்களில் கிழிந்த நோட்டுகள் வருவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு கிழிந்த நோட்டுகள் உங்களுக்கு கிடைக்கப்பெற்றால் இதற்கு தீர்வுகாண ரிசர்வ் வங்கி சில திட்டங்களை வகுத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கிழிந்த நோட்டுகள் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் எந்த ATM களில் பணம் எடுத்தீர்களோ அந்த வங்கிக்கு சென்று இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும். அதற்காக அவ்வங்கியில் கொடுக்கப்படும் ஒரு படிவத்தை நிரப்பி, நீங்கள் பணம் எடுத்த ரசீதையும் அதனுடன் இணைக்க வேண்டும். ஒருவேளை ரசீது கிடைக்கா விட்டால் பணம் எடுத்த நேரம், கணக்கு எண், ATM கிளை போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உங்களிடம் உள்ள கிழிந்த நோட்டுக்கு பதிலாக நல்ல நோட்டு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here