TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவது எப்படி? மதிப்பெண்கள், தேர்வு முறை & முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவது எப்படி? மதிப்பெண்கள், தேர்வு முறை & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவது எப்படி? மதிப்பெண்கள், தேர்வு முறை & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவது எப்படி? மதிப்பெண்கள், தேர்வு முறை & முழு விபரம் இதோ!

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 2, குரூப் 2A தேர்வு நடைபெறும் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கும்.

முழு விபரம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தகுதியான பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 என்று அரசு பணிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு TNPSC தேர்வு குறித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில், குரூப் 2, குரூப் 2A தேர்வு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விவசாயிகளின் முக்கிய கோரிக்கை!

தமிழ்நாடு தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வரும் 23ஆம் தேதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் மற்றும் மார்ச் 23ஆம் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் என்று கூறினார். தேர்வுகள் மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை எனவும் கூறினார்.குரூப் 2, குரூப் 2 ஏ மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறினார்.

கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும் மே 21ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் கூறினார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் பாலச்சந்திரன் கூறினார். தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழ் 100 கேள்விகள், ஆப்டியூட் டெஸ்ட் 25 , பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், ஆப்டிடியூட் 25 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!