NEET UG 2022 தேர்விற்கான முடிவினை அறிந்துகொள்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

0
NEET UG 2022 தேர்விற்கான முடிவினை அறிந்துகொள்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!
NEET UG 2022 தேர்விற்கான முடிவினை அறிந்துகொள்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!
NEET UG 2022 தேர்விற்கான முடிவினை அறிந்துகொள்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

நாடு முழுவதும் NEET UG 2022 தேர்விற்கான முடிவு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தேர்வு முடிவினை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NEET தேர்வு

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான NEET தேர்வை எழுதினர். இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான NEET- UG 2022 தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும், நீட் தேர்விற்கான விடைத்தொகுப்பு (Provisional Answer keys), தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்யப்பட்ட தேர்வரின் விடைகள் ஆன்லைனில் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்.17 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 100 + முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

மேலும், தேசிய தேர்வு முகமை வெளியிடும் இந்த விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அதற்கான விடைகள் மறுஆய்வு செய்யப்பட்டு சரியான விடை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் தேர்வாளர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். மேலும், NEET தேர்வு முடிவினை தேர்வாளர்கள் neet.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் NEET UG 2022 தேர்வில் வெற்றி பெற இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் குறைந்தபட்சமாக 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக நீட் தேர்வு முடிவினை அறிந்து கொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், neet.nta.nic.in என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று NEET UG 2022 முடிவு என்பதை கிளிக் செய்யவும். பின்னர், அதில் தோன்றும் புதிய பக்கத்தில் நற்சான்றிதழ்களை பதிவு செய்து அனைத்து தகவலையும் உள்ளிட வேண்டும். பின்னர், நீட் தேர்விற்கான முடிவு உங்கள் திரையில் தோன்றும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!