PF பணத்தை ஆன்லைன் & ஆஃப்லைன் மூலம் எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள் இதோ!

0
PF பணத்தை ஆன்லைன் & ஆஃப்லைன் மூலம் எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள் இதோ!

EPF கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்ற முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளில் செய்யலாம்.

எளிய வழி

வேலை செய்யும் அனைவரும் PF கணக்கை வைத்திருக்கின்றனர். இந்த கணக்கு EPFO நிறுவனத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் சேமிக்கப்படுகிறது. இதனை உங்களுடைய ஓய்வுக்கு பின் நீங்கள் பெறலாம். அவ்வாறு இல்லாமல் இந்த பணத்தை இடையில் திரும்ப பெற வேண்டும் என நினைத்தால் அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

அதாவது PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க,ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரு வழிகள் இருக்கிறது. அதற்கு நீங்கள் படிவம் 19யை பயன்படுத்தி PFல் இருந்து பணத்தை எடுக்கலாம். நீங்கள் முழு பணத்தையும் எடுக்கலாம் அல்லது அதில் ஒரு பகுதியை எடுக்கலாம். படிவத்தை பூர்த்தி செய்து 20 நாட்களுக்குள் பணம் கிடைக்காதவர்கள் தங்கள் பிராந்திய PF கமிஷனரிடம் புகார் செய்யலாம்.

IIT Madras-ல் Junior Technician வேலைவாய்ப்பு 2024 – 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

அதற்கு UAN மற்றும் கடவுச்சொல் மூலம் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான unifiedportal-mem.epfindia.gov.inல் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.

பின் ஆன்லைன் சேவைகள் என்பதில் ‘Claim’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின் திறக்கப்படும் டேப்பில், உங்கள் சரியான கணக்கு எண்ணை உள்ளிட்டு சரிபார் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். சரிபார்த்த பிறகு, நீங்கள் EPFO வழங்கிய விதிகளைப் பின்பற்றி அதை முடிக்க வேண்டும்.

இப்போது நீங்கள் உங்களுக்கு பணம் தேவை என விண்ணப்பிக்கலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!