ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் பெறுவது எவ்வாறு? முழு விவரங்கள்!

0
ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் பெறுவது எவ்வாறு? முழு விவரங்கள்!
ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் பெறுவது எவ்வாறு? முழு விவரங்கள்!
ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் பெறுவது எவ்வாறு? முழு விவரங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் உயர்கல்வி பெற எவ்வாறு கல்விக்கடன் பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

கல்விக்கடன்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மதிப்பீடு முறைப்படி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மின் கணக்கீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் – மின்துறை அமைச்சர் தகவல்!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில விரும்பும் ஏழை, எளிய மாணவர்கள் எளிதாக கல்விக்கடன் பெற்று படிக்க அரசு வழிவகை செய்துள்ளது. கல்விக்கடன் பெற மாணவர்கள் நேரடியாக வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.

மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi Portal மூலமாக எளிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஏதாவது 3 வங்கிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும், கல்விக் கடன் பெறுவதை பாதிக்காது. மேலும் UGCன் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

ஏழரை லட்சம் வரை அடமானம் ஏதும் இல்லாமல் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு மட்டும் அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை அடமானமாக கொடுக்க வேண்டும். ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற பெற்றோர்களின் கையொப்பம் மட்டுமே போதுமானது. ஆவணம் அல்லது மூன்றாம் நபரின் கையெழுத்து சமர்ப்பித்தால் வட்டி மானியம் கிடையாது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுகும் கடன் உதவி கிடைக்கும். ஆனால் வட்டி மானியம் கிடைக்காது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை 15 ஆண்டுகள் வரை தவணை முறையில் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது

கல்லூரி விடுதி, ஆய்வுக்கூடம் வெளிநாட்டுக்கான பயணச்செலவு, உபகரணங்கள், சீருடை, மடிக்கணினி ஆகியவற்றுக்கு தேவையான செலவையும் கூட சேர்த்து கல்விக் கடன் பெற முடியும். இந்த கல்விக்கடன் பெற பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிட மற்றும் வருமான வரி சான்று போன்றவை கட்டாயம் தேவைப்படுகிறது. ஏழை எளிய மாணவர்கள் பணம் காரணமாக தங்களது விரும்பிய படிப்பில் சேர முடியாமல் இருப்பதால் கல்விக்கடன் பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும். மாணவர்கள் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வங்கி மாணவருக்கு கடன் அளிப்பது அல்லது நிராகரிப்புக்கான காரணம் தெரிவிக்க வேண்டும். உரிய பதில் ஏதும் கிடைக்காத பட்சத்தில் மத்திய அரசின் இணைய தளமான pgporatl.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!