ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!

0
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில், ஆதாருடன் எந்தெந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி பார்க்கலாம் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு தான் விளங்கி வருகிறது. மேலும், அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இத்துடன், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதனை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனையடுத்து, பெரும்பாலும் ஆதார் கார்டை எந்த எண்ணுடன் இணைத்திருக்கிறோம் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும். ஏதாவது அவசர தேவையின் போது தான் உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வராமல் பதறிக் கொண்டிருப்போம்.

Exams Daily Mobile App Download

இதுமாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க தான் ஏற்கனவே ஆதார் கார்டு எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, TAFCOP போர்டல் மூலமாகவே எளிதாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டுபிடித்துவிடலாம். மேலும், TAFCOP என்கிற இணையதளம் மூலமாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசிக்கும் மக்கள் மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

தற்போது எப்படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டறியலாம் என்பதை பார்க்கலாம். முதலில் tafcop.dgtelecom.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அங்குள்ள சாட்பாக்ஸில் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும். OTP எண்ணை பதிவு செய்தவுடன் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் விவரங்கள் காண்பிக்கப்படும். அதில் வேறொருவர் மொபைல் எண் இருந்தால் This is not my number என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலமாக தேவையற்ற மொபைல் எண்ணை ஆதாரில் இருந்து நீக்கி விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!