TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை  24 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான உத்தேச விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை  24 ஆம் தேதி நடைபெற்றது.  மொத்தம் 301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அதில் 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்கள்.

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு தேர்வுகள் கடினமாக இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வாணையத்தின் உத்தேச விடைக்குறிப்புகள் எப்போது வெளியிடப்படும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தற்போது உத்தேச விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனை டவுன்லோட் செய்வது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு எப்போது வெளியீடு? முக்கிய அறிவிப்புஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்பதற்கு செல்ல வேண்டும்.
  • அதில் அறிவிப்புகள் பகுதியில் ஸ்ரோல் ஆகி வரும் அறிவிப்புகளில் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் குரூப் 4 தேர்வு பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு (GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003)) என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்களுக்கான விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். அதில் நீங்கள் விடையளித்ததை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • மேலும் நேரடியாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளப் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.  Tentative/Document/CCS4T_2022_OPT.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!