TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்புகின்றனர். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 17ம் தேதியிலும், இரண்டாம் தாள் ஜூன் 28ம் தேதியிலும் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது குறித்து பார்ப்போம்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்தது.

மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்தில் 15000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் 50% மதிப்பெண் தேர்ச்சி பெற்றதுடன் டிப்ளமோவில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் இரண்டாம் தாள் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தாள்-I மற்றும் தாள்-II தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

  1. முதலாவதாக ttp://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
  2. இதில் TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. இப்போது புதிய பக்கம் தோன்றும். இதில் டீட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  4. இந்த 2 ஆப்ஷனில் நீங்கள் எழுத தேர்வுக்குரியதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. இப்போது சிலபஸ் பிடிஎஃப் பைல் OPEN செய்யப்படும். இதில் டவுன்லோடு என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!