மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். தற்போது இதிலுள்ள 12 இலக்க எண்களை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மாஸ்க்டு ஆதார்

இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டையை UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. தற்போது ஆதார் எண் அனைத்து பயன்பாடுகளுக்கும் தேவைப்படுகிறது. அத்துடன் ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் உங்களின் மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட தனிநபர் கணக்குகளில் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் எண்ணை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதில் உங்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் உள்ளதால் இதனை பயன்படுத்தி மோசடிகள் ஏற்படுத்தப்படலாம்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது ஆதாரில் உள்ள 12 இலக்க எண்ணை பயன்படுத்தி வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை திருடி விடலாம்.  அதனால் 12 இலக்க எண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  இதற்கு பதிலாக மத்திய அரசு மாஸ்க்டு ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில் ஆதாரிலுள்ள 12 இலக்க எண்ணில் கடைசி 4 எண்கள் மட்டுமே தெரியும்.  இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு அரசின் அனைத்து துறைகள் மற்றும் அனைத்து சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.  இதனை பெற விரும்பும் நபரகள் myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. முதலில் இதற்கு https://eaadhaar.uidai.gov.in/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது இதில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

3. இதையடுத்து ஒரு புதிய பக்கம் தோன்றும். இதில் “மாஸ்க்டு ஆதார் தேவை” என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது இதில் கேப்சா குறியீடை சரியாக உள்ளிட வேண்டும். அதன்பின் “OTP” எண் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. இறுதியாக ஆதாரில் பதிவிடப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு உங்களின் மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!