உங்களின் e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதற்கு ஆதார் எண் தேவையில்லை! முழு விபரம் இதோ!

0
உங்களின் e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதற்கு ஆதார் எண் தேவையில்லை! முழு விபரம் இதோ!
உங்களின் e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதற்கு ஆதார் எண் தேவையில்லை! முழு விபரம் இதோ!
உங்களின் e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதற்கு ஆதார் எண் தேவையில்லை! முழு விபரம் இதோ!

இந்தியாவில் தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் எதிர்பாராத விதமாக ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? மேலும் ஆதார் எண்ணை மறந்து விட்டீர்களா? e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

இந்தியாவில் தற்போது வங்கி கணக்கு, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் ஆதாரில் உங்களின் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். மேலும் தற்போது பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கும், அரசின் ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் எண் ஆனது அவசியமாகிறது. இதையடுத்து நீங்கள் ஆதார் கார்டை தொலைத்து விட்டால் கவலைப்பட தேவையில்லை.

Follow our Instagram for more Latest Updates

அதாவது ஆன்லைன் முறையில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கு UIDAI அனுமதிக்கிறது. மேலும் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு அடையாள எண் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஒருவேளை உங்களிடம் ஆதார் எண் இல்லையென்றாலும் உங்களால் சுலபமாக இ-ஆதாரை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதற்கு நீங்கள் Enrolment ID-ஐ மீட்டெடுக்க வேண்டும். இதற்கு UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Get Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் 8,000 ஒப்பந்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ரத்து – அசாம் மாநில கல்வித்துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்பின்பு Enrollment ID Retrieve என்பதை கிளிக் செய்து உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பி வைக்கப்படும். இதனை உள்ளீட்டு பின்பு உங்களுக்கு Enrollment ID கிடைக்கும்.

e-Aadhaar பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்!

1. இதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு (UIDAI) செல்ல வேண்டும்.

2. இப்போது ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது Aadhaar number அல்லது enrolment ID உள்ளிட வேண்டும்.

4. இறுதியாக ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்களின் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டு ’verify and download’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக உங்களின் இ-ஆதார் பதிவிறக்கம் செய்ய தொடங்கப்படும். இதனை நீங்கள் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!