இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

0
இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் ஆதார் அட்டையின் இ-ஆதார் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இ-ஆதார் கார்டு

அரசு, கல்வி, வங்கி நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் எதாவது ஒரு செயல்பாட்டை உபயோகிக்க விரும்பினால் மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை நாம் செல்லும் அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்ல முடியாத சூழல் காணப்படுவதுண்டு. முன்னதாக ஆதார் அட்டைகள் தொலைந்து விட்டால் அதை திரும்ப பெறுவதற்கு மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலையை வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழ்நிலைகளை தவிர்க்க இ-ஆதார் கார்டு எளிதான விஷயமாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இ-ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வதற்கு;

 • முதலில் UIDAI வின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
 • அதில் My Aadhaar என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
 • பிறகு Get Aadhaar Option என்ற பதிவை கிளிக் செய்யவும்.
 • அதில் ஆதார் சென்டர் உட்பட பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 • அதன் கீழே Download Aadhaar என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும், அதை கிளிக் செய்யவும்.
 • அதில் Aadhaar Number, Enrollment Number மற்றும் Virtual ID இவற்றை பயன்படுத்தி download ஆதார் என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
 • அதில் ஆதார் எண்ணை பயன்படுத்தி எளிய வழியில் உள் நுழையலாம்.
 • பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்யவும்.
 • ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
 • அந்த OTP எண்ணை பதிவு செய்து Verify கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
 • பிறகு இ-ஆதார் கார்டு உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும்.

தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியல் – மறுசீராய்வு மனு தள்ளுபடி!!

கடவுச்சொல் உருவாக்கம்:

 • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் கார்டை பயன்படுத்த கடவுச்சொல் உருவாக்கப்பட வேண்டும்.
 • பதிவிறக்கம் செய்யப்பட்ட பைலை Open செய்து உங்கள் பெயரில் முதல் நான்கு எழுத்தை Capital letter ல் பதிவு செய்யவும்.
 • பிறகு உங்கள் பிறந்த ஆண்டை பதிவு செய்யவும்.
 • உங்கள் பெயருடன் பிறந்த ஆண்டும் சேர்த்து புதிய கடவுச்சொல் உருவாக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here