ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக விளங்கிவரும் ஆதார் அட்டையை, எப்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் கார்டு தான் முக்கிய ஆதாரமாக விளங்கிவருகிறது. மேலும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆதார் அட்டையில் ஏதேனும் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் இவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆனால், தற்போது ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமலேயே ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யும்படியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் மற்றும் அந்த குறிப்பிட்ட மொபைல் எண்ணில் இருந்து ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதில் சில சிக்கல்கள் இருந்தாலும் இத்தகைய புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி மொபைல் எண் இல்லாமலேயே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது என்பதனைப் பார்க்கலாம்.

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – இனி கோதுமை கிடையாது! அதிர்ச்சி தகவல்!

முதலில் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று My Aadhaar என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு என்கிற பகுதியை கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) கூட பதிவு செய்யலாம். பின்பு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு My mobile number is not registered என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஏதேனும் மாற்று எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் Send OTP என்கிற பகுதியை கிளிக் செய்து OTP எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர் Terms and Conditions என்கிற பகுதியை கிளிக் செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், இறுதியாக Make Payment என்பதை கிளிக் செய்து பணம் செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here