ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!!

2
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் - ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் - ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!!

அரசு மற்றும் தனியார், வங்கி என அனைத்து பணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்றம் செய்வது, ஆன்லைன் மூலம் இப்போது எளிதாக்கப்பட்டு விட்டது.

முகவரி மாற்றம்:

மத்திய அரசின் அடையாள அட்டையாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை பள்ளி, கல்லூரி, வங்கி, தொழில் போன்ற அனைத்து சேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு போன் வாங்குவது துவங்கி வருமானவரி செலுத்துவது வரைக்கும் ஆதார் அட்டை அவசியம். இந்த ஆதார் அட்டைகளை பலர் வாங்கியது போல புதிதாக வைத்துள்ளனர். இப்போது எடுத்து பார்த்தால், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எல்லாம் பழையதாக இருக்கும். அதாவது நாம் ஆதார் அட்டையை பெரும் போது உள்ள புகைப்படம் இப்போதிருப்பதை விட வேறுபட்டிருக்கும்.

TN Job “FB  Group” Join Now

அதே போல நமது மொபைல் எண், முகவரி போன்ற முக்கியமாக தகவல்களும் மாறி இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆதார் அட்டை பயனாளர்களும் உங்களது ஆதார் அட்டையை அடிக்கடி அப்டேட் செய்வது அவசியமானதாகும். முன்பு, ஆதார் அட்டையில் எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதால் நாள் ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போதோ நாம் எல்லாவற்றையும் வீட்டிலிருந்தபடியே, ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இப்போது ஆதார் அட்டையில் உங்கள் வீட்டு முகவரியை மாற்றுவது குறித்த எளிதான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற,

 • முதலாவது ssup.uidai.gov.in என்ற இணையதளத்தை லாகின் செய்து கொள்ளவும்.
  அதில் Update Aadhaar என்பதை தேர்வு செய்யவும்.
 • பிறகு உங்கள் ஆதார் எண்ணை அதில் கேட்கப்பட்டிருக்கும் இடத்தில் பதிவு செய்யவும்.
 • அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்யவும்.
 • இப்போது உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை சரியாக பதிவு செய்யவும்.
 • பிறகு Address update என்பதை தேர்வு செய்யவும்.
 • அதில் ஸ்கேன் செய்த சரியான முகவரி ஆதாரத்தை (valid address proof) பதிவு செய்யவும்.
 • பிறகு அப்டேட் என்பதை தேர்வு செய்யவும்.
 • பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு முகவரியை அப்டேட் செய்ததற்கான எண் (URN) ஒன்று கொடுக்கப்படும்.
 • இதை வைத்து உங்கள் ஆதார் எண்ணின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்கு மாற்று வழியாக உங்கள் முகவரியை மாற்ற,

 • முதலாவது ssup.uidai.gov.in என்ற இணையதளத்தை லாகின் செய்து கொள்ளவும்.
 • அதில் Update Address via Secret Code என்பதை கிளிக் செய்து சரிபார்ப்பு ஆதார் எண்ணை உள்ளிடவும்.
 • பிறகு உங்களுக்கு ஒரு SRN எண் கொடுக்கப்படும்.
 • அதை வைத்து உள்ளே நுழைந்த பிறகு ஒரு link கொடுக்கப்படும்.
 • பிறகு OTP எண் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
 • அதை வைத்து சரி பார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண்ணில் சேவை கோரிக்கை எண் (SRN) பெறுவீர்கள்.
 • பிறகு SRN எண்ணை வைத்து Aadhaar portalலில் உள் நுழையவும்.
 • உங்கள் Address Validation Letter உடன் ஒரு ரகசிய எண் கொடுக்கப்படும்.
 • பிறகு SSUP போர்டலுக்குள் நுழைந்து முகவரியைப் புதுப்பிக்க இந்த ரகசிய குறியீட்டை உள்ளிட வேண்டும்.
 • இறுதியாக உங்கள் முகவரியை சரிபார்த்த பிறகு submit கொடுக்கவும்.
 • பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு, முகவரி அப்டேட் செய்ததற்கான எண் (URN) ஒன்று கொடுக்கப்படும்.
 • இதை வைத்து உங்கள் ஆதார் எண்ணின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!