ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி
ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி

ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படத்தினை மாற்றம் செய்வதற்கான வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளம் என்றால் அது ஆதார் அட்டை தான். இந்திய குடிமகன் என்பதற்கு சான்றாக ஆதார் அட்டை இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் முறையாகப் பெறுவதற்கு முக்கியமான ஆவணமாக விளங்கிவருகிறது. மேலும், ஆதார் அட்டையிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதனால், ஆதார் அட்டையில் இருக்கும் 12 இலக்க எண்ணை அவசியமில்லாமல் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

10th, 12th படித்தவரா ? ரூ.11,730/- மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

மேலும் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் என அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதனை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், ஆதார் அட்டையில் ஏதேனும் சிறிய தவறுகள் இருந்தாலும் கூட உடனடியாக அந்த தவறினை சரி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தினை கூட மாற்றம் செய்து கொள்ளும்படியான வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆதார் கார்டில் பெயர், முகவரி போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தல் மற்றும் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால் கண்டிப்பாக ஆதார் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். தற்போது எப்படி ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். முதலில், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான uidai.gov.inக்கு செல்ல வேண்டும். பின்பு, ஆதாரைப் புதுப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அந்த படிவத்தினை நிரப்ப வேண்டும். பின்பு அந்த பதிவு செய்யப்பட்ட படிவத்தினை அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் சென்று ஒப்படைக்க வேண்டும் மற்றும் மையத்திலுள்ள நிர்வாகி விவரங்கள் அனைத்தையும் சரி பார்த்து புதிய புகைப்படத்திற்கான புகைப்படத்தை எடுப்பார். பின்பு விவரங்கள் அனைத்தும் பதிவு செய்து 90 நாட்களில் புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை கிடைத்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!