ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தினை கூட மாற்றம் செய்வதற்கான புதிய வசதி தற்போது பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதற்குரிய முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார்கார்டு விளங்கி வருகிறது. மேலும், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார்கார்டு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இதனால், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக கிடைப்பதற்கு ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்துகொள்ள வேண்டும். மேலும், ஆதார் கார்டில் முகவரி, பெயர், மொபைல் எண், பிறந்த தேதி ஆகியவற்றில் எந்த பிழைகள் இருந்தாலும் உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும், ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆகியவற்றில் பிழைகள் இருந்தால் ஆன்லைன் மூலமாகவே சரி செய்துகொள்ள முடியும். ஆனால், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தல் மற்றும் ஆதார்கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை நேரில் தொடர்புகொள்ள வேண்டும். தற்போது எப்படி ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்)த்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான  uidai.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கனமழை காரணமாக ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பின்பு, அந்த படிவத்தினை எந்த பிழையும் இல்லாமல் நிரப்பி அருகிலுள்ள ஆதார் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலான ஆவணங்களையும் ஆதார் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனையடுத்து, புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும் மற்றும் இதற்குரிய ரசீது வழங்கப்படும். மேலும், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனையடுத்து, இரண்டு வாரங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை கிடைத்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!