ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும். அத்துடன் அனைத்து பயன்பாடுகளுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். தற்போது ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதாவது ஆதரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, மொபைல் எண், முகவரி, பாலினம் உள்ளிட்டவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் உள்ளிட்டவை சரியானதாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பல நேரங்களில் வேலையின் காரணமாக அல்லது வெளியூர்களில் குடியேறிதன் காரணமாக உங்கள் முகவரியை மாற்ற வேண்டியிருக்கும். அத்துடன் இந்த மாற்றத்தை உங்களின் ஆதாரிலிலும் நீங்கள் மாற்ற வேண்டியது அவசியமானதாகும். மேலும் நீங்கள் அடிக்கடி வீடுகளை மாற்றி கொண்டே இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது உங்கள் முகவரியை எந்தவித அட்ரஸ் ப்ரூப் ஆவணங்களின்றி அப்டேட் செய்யலாம். அதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

Exams Daily Mobile App Download
ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ‘Request Aadhaar Validation Letter’ என்பதற்குச் சென்று சரிபார்ப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்

2. Aadhaar Card Verifier இதன் மூலமாக முகவரியை புதுப்பிக்க முதலில் Address Validation Letter-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

3. இப்போது Self Service Update Port – SSUP என்பது திரையில் தோன்றும்.

4. இதில் ஆதார் அட்டை குறித்த விவரத்தை சரியாக உள்ளிட வேண்டும்.

5. இப்போது ‘Aadhaar Card Verifier’ இதில் காண்பிக்கப்படும் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் – முக்கிய அறிவிப்பு!

6. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

7. இப்போது Service Request Number – SRN உங்களுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு SRN மூலம் உள்நுழைந்து, உங்கள் புதிய முகவரியை உள்ளிட வேண்டும்.

8. இதையடுத்து ‘Address Validation Letter’ மற்றும் ‘Secret Code’ அனுப்பப்படும். இப்போது ஆதார் அப்டேட் என்ற பகுதிக்குச் சென்று Secret Code வழியாக Update Address என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இப்போது புதிய முகவரியை கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் புதிய முகவரி அப்டேட் செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!