குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறை!

0
குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறை!
குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறை!
குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறை!

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை பெறுவதற்கு வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறைகள் மற்றும் ஆதார் பெறும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பால் ஆதார் அட்டை:

இந்திய நாட்டில் ஆதார் அட்டை இன்று அனைவருக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. இது முதியவர்கள் & இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் கல்வி சேர்க்கை போன்ற பல முக்கிய காரணங்களுக்காக ஆவணமாக ஆதார் கேட்கப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நீல வண்ண 12 இலக்க ஆதார் அட்டையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு பால் ஆதார் அட்டை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WhatsApp வழி தகவல்!

பால் ஆதார் அட்டை எடுப்பதற்கு பெற்றோர்கள் தங்களது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். அங்கு ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவு விண்ணப்பம் ஒன்றினை பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும். பொதுவாக 5 முதல் 15 வயதுடைய குழந்தையின் கைரேகை மற்றும் முக புகைப்படம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

பால் ஆதார் அட்டை எடுப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பள்ளி ஐடி
  • பெற்றோரின் ஆதார் அட்டை விவரங்கள்
  • குழந்தை பிறந்த மருத்துவமனையில் இருந்து கொடுத்த சான்றிதழ்
  • பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த பதிவு அட்டை

பால் ஆதார் எடுப்பதற்கு பெற்றோரின் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் அவசியம். 5 வயதுக்கு குறைவான குழந்தையின் பயோமெட்ரிக் எடுக்கப்படாது. 5 வயதுக்கு குறைவான குழந்தையின் ஆதார் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து முன்பதிவு செய்யும் முறை:
  • பால் ஆதார் அட்டை எடுப்பதற்கு முதலில் UIDAI வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், அங்கு கொடுக்கப்பட்ட ஆதார் பதிவிற்கான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இங்கு, குழந்தையின் பெயர், பெற்றோரின் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது உங்களுக்கான முன்பதிவை பதிவு செய்து, உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையம் மற்றும் நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!