NEET UG 2021 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 13) மாலை முதல் துவங்க உள்ளது.
நீட் விண்ணப்பம்:
இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (NEET) செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் பதிவு செயல்முறை மூலம் இன்று முதல் மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்ப பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதற்கான கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த விண்ணப்ப படிவங்களை மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் கணினியைப் பயன்படுத்தி, தேவையான தகவல்களை மிகவும் கவனமாக, சரியாக நிரப்ப வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் வழிமுறைகள் தற்போது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
- முதலில் NEET தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளமான nta.nic.in க்குச் செல்லவும்.
- அதில் New Registration என்பதை தேர்வு செய்யவும்.
- அங்கு படிவம் தொடர்பான வழிமுறைகளைக் கொண்ட புதிய பக்கம் திறக்கும்.
- அந்த பக்கத்தின் கடைசியில் Start the Registration Process என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவப்பு நிற பாக்ஸ் தோன்றும்.
- அதை கிளிக் செய்யவும்.
- மீண்டுமாக ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதில் உங்கள் பெயர், பாலினம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும்.
- அந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்தவுடன், கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து Preview & Next என்பதை கிளிக் செய்யவும்.
- அங்கு திறக்கப்படும் புதிய பக்கத்தில் நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.
- அவற்றைச் சரிபார்க்கவும். அதில் எதாவது தவறு இருந்தால் அவற்றை சரி செய்யவும்.
- பிறகு அடுத்த பக்கத்தை திறந்து, Password அமைக்க வேண்டும்.
- இந்த Password விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், மாற்றங்களைச் செய்யவும், அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும், முடிவை சரிபார்க்கவும் தேவை என்பதால் அதை சேமித்து வைக்கவும்.
- உங்கள் Password ஐ நீங்கள் பதிவுசெய்ததும், உங்கள் Application Number தோன்றும்.
- இவற்றை சேமித்து, Login ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவ எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி
- நீட் 2021 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
- குறிப்பாக NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் Draft செய்து கொள்ள முடியும்.
- இப்படி செய்தால் உங்கள் விண்ணப்ப படிவத்தை அடிக்கடி Log Out மற்றும் Login செய்து கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
- இப்போது விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தவுடன், விவரங்களை சரிபார்க்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை மீண்டும் மதிப்பாய்வு செய்தவுடன் ஆவணங்களை பதிவேற்ற அடுத்த கட்டத்திற்குச் செல்லவும்.
- குறிப்பிடப்பட்டுள்ள படி தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
ஆவணங்களை பதிவேற்றியதும், இப்போது கட்டணம் செலுத்த வேண்டும். - இதற்காக திறக்கப்படும் புதிய பக்கத்தில் தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் வங்கியை தேர்ந்தெடுத்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட்பேங்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
- இக்கட்டணம் முழுமையாக நிறைவடையவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது.
- இந்த செயல்முறை முடிந்ததும் உங்கள் விவரங்களை Print செய்து கொள்ள புதிய பக்கம் திறக்கும்.
- அதில் Print Confirmation Page என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு அப்படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.