வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் – விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

0
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் - விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் - விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் – விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக விளங்குகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்த ஆதார் அட்டையை பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் தற்போது வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி செலுத்துவது வரை அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாக உள்ளது. அதனால் ஆதார் கார்டில் உள்ள முகவரி, பெயர் போன்ற விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது ஆதார் கார்டை பெறும் நடைமுறை மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாக இ- சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து ஆதார் கார்டை பெறலாம் . இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு அவசியமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பாஸ்போர்ட் எண் கொண்ட NRI ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை – காவல்துறை உத்தரவு!

அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று NRI ஆதார் அட்டையை பெறலாம். அதற்கு பாஸ்போர்ட் முகவரி மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சான்றாக பயன்படுத்தலாம். குறிப்பாக இந்திய மொபைல் எண்ணை ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!