தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை – எப்படி விண்ணப்பிப்பது?

1
தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை - எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை - எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை – எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு சார்பாக ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சலுகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சலுகை:

தமிழக அரசு பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு தேவைப்படும் சான்றிதழ் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூடிய புகைப்படம், குடியிருப்பு சான்று, பெற்றோரின் கருத்தடை சான்று, முதல் மற்றும் இரண்டாம் குழந்தையின் பிறப்பு சான்று, ஆதார் அட்டை ஆகிய சான்றிதழ்கள் தேவைப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 26 மின்தடை!

விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • முதலில் அரசின் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnesevai.tn.gov.in/ என்ற தளத்தின் முகப்பு பகுதியில் Sign in எனும் ஆப்சன் இருக்கும்.
  • அதில் Franchisee Login மற்றும் Citizen Log என்று இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் Citizen Login என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள New User என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP எண் வரும்.
  • அதை உள்ளீடு செய்ய வேண்டும். பின் Login மற்றும் password ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • பின் அப்பகுதியில் உள்ள Department Wise என்னும் ஆப்சனில் உள்ள Revenue Department என்பதை கிளிக் செய்து No Male Child Certificate என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!

  • பின் Register CAN என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  • இதையடுத்து நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number மெசேஜாக வரும். அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • CAN Register செய்யும் போது நீங்கள் கொடுத்த முகவரி விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். பின் அதில் Applicant Detail பகுதியில் தந்தையின் பெயர், தாயின் பெயர் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் சரியாக நிரப்ப வேண்டும்.
  • இதனை தொடர்ந்து Add Child Details பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பெயர், பிறந்த தேதியை நிரப்பி, பெற்றோர்களில் யாருக்கு கருத்தடை செய்யப்பட்டது என்ற விவரங்களை தேதியுடன் சேர்த்து தெளிவாக கொடுக்க வேண்டும்.
  • விவரங்கள் அனைத்து சரியானவையாக என்று பார்த்து கொண்டு Submit என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து List of Documents பகுதியில் Combined Photo of Parents, Residence Proof, Sterilization Certificate of Parents, Birth Certificate of First Children, Birth Certificate of Second Children, Family/Smart Card போன்ற ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீடு – அரசுக்கு வலியுறுத்தல்!

  • உங்களிடம் உள்ள புகைப்படத்தை 50 kB அல்லது 200 kb pdf ஆக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக Self Declaration Form-ஐ பதிவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பின், அதனை Scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து Make Payment என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • அரசாங்க அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு இதற்கான தகவல் மெசேஜ் வரும்.
  • பின் TNeGA Login செய்து ஆண் குழந்தை இல்லாத சான்றிதழ் (No Male Child Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!