முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு தரும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் அவசியமாகும். இதற்கான சான்றிதழை தற்போது ஆன்லைன் மூலமே எளிதாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆன்லைன் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் முதன் முதலாக பட்டப்படிப்பு படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு சில சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் அனைத்து முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதன் படி அரசு தரும் இச்சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் தேவைப்படும். இந்த சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு தற்போது ஆன்லைன் மூலமே விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!

அப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது சில ஆவணங்கள் முக்கியமாக தேவைப்படும். அந்த வகையில் விண்ணப்பம் செய்பவரின் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , 12 ஆம் வகுப்பு சான்றிதழ், கல்லூரியில் விண்ணப்பம் செய்த படிவம், விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் தாய் கல்வி சான்றிதழ், உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ் ஆகியவை முக்கியமானதாகும். இவற்றை கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க,

 • முதலில் https://tnega.tn.gov.in/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
 • அதில் Citizen Login என்பதை தேர்வு செய்யவும்.
 • இதில் முன்னமே Account வைத்திருப்பவர்கள் User Name மற்றும் Password கொடுத்து enter கொடுக்கவும்.
 • பின்னர் Captcha கோர்டை கொடுத்து லாகின் செய்யவும்
 • இதில் கணக்கு இல்லாதவர்கள், புதிய Account ஐ திறக்க வேண்டும்.
 • அதாவது அந்த இணையதளத்தில் New User எனும் ஆப்ஷனில் Sign Up என்பதை தேர்வு செய்து புதிய கணக்கை திறக்கலாம்.
 • இப்போது கணக்கு திறந்ததும் லாகின் செய்யவும்.
 • அதில் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.
 • இங்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் பட்டதாரி என்பதை கிளிக் செய்து Proceed கொடுக்கவும்.
 • தொடர்ந்து Register can என்பதை தேர்வு செய்யவும்.
 • அதில் ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
 • பிறகு விண்ணப்பதாரர் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை மற்றும் தாய் பெயர், மதம், கல்வித் தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து பின்னர் Generate OTP என்பதை தேர்வு செய்யவும்.
 • இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
 • அந்த எண்ணை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவும்.
 • தொடர்ந்து CAN நம்பர், மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்து விவரங்களை உள்ளிடவும்.
 • இப்போது Search ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • அதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து Proceed கொடுக்கவும்.
 • பின்னர் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து Generate OTP என்பதை கொடுக்கவும்.
 • தொடர்ந்து OTP எண்ணை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Proceed செய்யவும்.

ரூ.32,000/- ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை 2021

 • அடுத்து Current Course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை எழுதவும்.
 • தகவல்களை சரிபார்த்து Submit கொடுக்கவும்
 • அடுத்து ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
 • இங்கு Self Declaration படிவம் மற்றும் Download Aaadhaar Consent படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கையொப்பம் செய்து, ஸ்கேன் கொடுத்து அப்லோடு செய்ய வேண்டும்
 • பிறகு Make Payment என்பதை கொடுக்க வேண்டும்.  அதில் நெட் பேங்கிங், UPI, டெபிட் கார்டு இதில் ஒன்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
 • பிறகு உங்களுக்கு ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும்.
 • அந்த ஒப்புகை சீட்டை வைத்து உங்கள் பகுதி VAO விடம் சரிபார்ப்பு செய்து பின்னர் தாசில்தார் ஒப்புகைக்காக கொடுக்க வேண்டும்.
 • இது முடிந்தவுடன் உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழை இப்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!