பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? எளிய வழிமுறைகள்!

0
பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? எளிய வழிமுறைகள்!
பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? எளிய வழிமுறைகள்!
பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? எளிய வழிமுறைகள்!

புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” (Passport Seva Kendras ) என்கிற செயல்பாட்டின் மூலம் இனி எளிதாக ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு:

முன்னதாக பாஸ்போர்ட் பெற, பாஸ்போர்ட் அலுவலகம் சென்று காகித வடிவில் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையை சரி செய்ய புதியதாக “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” (Passport Seva Kendras) (PSK) என்கிற செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற்று விடலாம். இதில் ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிக்கலாம் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை காணலாம்.

தேவையான ஆவணங்கள்:
 • ஆதார் அட்டை
 • விண்ணப்பதாரரின் புகைப்படம்
 • இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
 • ரேசன் கார்டு
 • பான் கார்டு
 • வாக்காளர் அடையாள அட்டை
 • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும், போடவும் செய்து அதை பதிவு செய்திருக்க வேண்டும்)
 • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • பிறப்புச் சான்றிதழ்
 • விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு / இறப்பு சான்றிதழ் ஏற்கத்தக்கதாகும்.
 • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்.
 • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்க வேண்டும்.
வேறு சான்றிதழ்கள்:
 • 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டு போகவும்.
 • உங்களது பெயரை (மதம் மாறும்போது / எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
 • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு போக வேண்டும்,
 • மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் / நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும். மனைவியும் சென்று வாங்க வேண்டும்.
 • பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
 • எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
குழந்தைகள் / சிறுவர்களுக்கு தேவையான ஆவணங்கள்:

சிறுவர் – சிறுமியருக்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல்துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

 • முதலில் www.passportindiagov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் New User என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்னர் அதில் வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் உங்களது பகுதிக்கு அருகில் உள்ள அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 • பின் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஈமெயில், லாக்இன் ஐடி, பாஸ்வேர்டு பின் உங்கள் விருப்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலை பதிவிட வேண்டும். உங்கள் பாஸ்வர்ட் மறந்து விட்டால் இந்த கேள்விக்கு உண்டான பதிலை கொடுத்து கூட உங்கள் அக்கவுண்ட்டை லாக் இன் செய்யலாம்.
 • பின்னர் உங்களது மெயில் ஐடிக்கு மெயில் வந்திருக்கும். அந்த மெயிலில் உங்களது அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்ய லிங்க் அனுப்பப்படும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
 • அப்போது புதிய பக்கம் ஒன்று ஓபன் ஆகும். அதில் உங்களது login id பதிவிட வேண்டும். இதை செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும்.
 • மீண்டும் லாக்இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிடவும். இதில் புதிய பாஸ்போர்ட் (Apply for fresh passport) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். பின் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
 • இதில் புதிய பாஸ்போர்ட், சாதாரண முறையா அல்லது தட்கல் முறையா மற்றும் பாஸ்ப்போர்ட்டில் 36 பக்கங்களா அல்லது 60 பக்கங்கள் வேண்டுமா என்று உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • பின்னர் உங்களைப் பற்றிய விபரங்களை அளிக்கவும் அதாவது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், இந்திய குடிமகனா, வேலை செய்பவரா, பான் எண் (விருப்பம்), வாக்காளர் அடையாள எண் (விருப்பம்), படிப்பு, ஆதார் எண் (கட்டாயம்). அனைத்து விபரங்களையும் ஆடையாளத்திற்காக நீங்கள் கொடுக்கும் ஆவணத்தை பொறுத்து ஓரே மாதிரியாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

 • பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைத் தரவேண்டும் (தாய் மற்றும் தந்தை).
 • அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும். அடுத்ததாக உங்கள் ஆதார் எண்ணில் இருக்கும் முகவரியைக் கொடுக்கவும் அதன் பின் உங்கள் மொபைல் எண். அடுத்து எதேனும் அவசரத்துக்குத் தொடர்புகொள்ள ஒருவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
 • உங்களது முதல் பாஸ் போர்ட் அல்லது இதற்கு முன்னதாக பாஸ்போர்ட் வைத்திருந்தீர்களா உங்கள் மீது எதுவும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்று சில கேள்விகளுக்குப் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.
 • அடுத்ததாக பாஸ்போர்ட் பெற தேவையான பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். பின் உங்களுக்கு வசதியான தேதி மற்றும் ஊரைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் பாஸ்ப்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஆன்லைனில் உங்கள் தகவல்கள் அடங்கிய பார்ம்-ஐ எடுத்துச் செல்ல வேண்டும்.
 • பின்னர் உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு போலீஸ் வெரிஃபிகேஷனுக்கு வருவார்கள். அதன் பின் 10 முதல் 15 தினங்களுக்குள் பாஸ்போர்ட் உங்களுக்கு கிடைத்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here