தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!!

4
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!!

தமிழக அரசின் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் மக்கள் அனைவரிடத்தும் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது ரேஷன் கார்டு. முந்தைய காலத்தில் புதிய கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டுகளில் ஏதேனும் பிழை, புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், உறுப்பினர் பெயர் நீக்குதல் போன்ற பணிகளுக்கு மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று பல மணி நேரங்களை செலவழித்து வந்தனர். தற்போது நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருவதால் புதிய ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

இன்றுடன் ஊரடங்கு நிறைவு – ஜூன் 15 வரை சில கட்டுப்பாடுகள் தொடரும்!!

ரேஷன் கார்டுகளில் மொத்தம் 5 வகை உள்ளன. எனவே இந்த வகையில் குடும்பங்களின் வருமான நிலை மற்றும் மூத்த குடிமக்கள் போன்றவர்களை அடிப்படையாக கொண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஐந்து வகை ரேஷன் கார்டுகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் மற்றும் சலுகைகளில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியாகியுள்ளது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • பயனர்கள் அதிகாரபூர்வ தளமான https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் மின்னணு அட்டை விண்ணப்பம் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து Name of Family Head என்ற ஆப்ஷனுக்கு கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குடும்ப தலைவரின் பெயரை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து குடும்ப தலைவரின் புகைப்படத்தை (5Mb) தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின்பு அட்டை தேர்வு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, இருப்பிட சான்று என்னும் இடத்தில் தங்களிடம் உள்ள உரிய ஆவணத்தை (1Mb) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு கேஸ் பில், தண்ணீர் பில், போன் பில் போன்றவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதனை தொடர்ந்து எரிவாயு இணைப்பு குறித்த விவரங்கள், தங்களிடம் எந்த நிறுவனம் சிலிண்டர் என்பது குறித்த விவரம் மற்றும் சிலிண்டர் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு உறுப்பினர் சேர்க்கை என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து, முதலில் குடும்ப தலைவரின் பெயர், அவரின் பிறந்த தேதி, வருமானம், ஆதார் எண், போன் நம்பர் போன்றவற்றினை பதிவு செய்ய வேண்டும்.
  • மேலும் அவரின் ஆதார் கார்டு ஸ்கேன் செய்து அதை அப்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு உறுப்பினர் சேர்க்கை சேமி என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் இதே முறையில் பதிவு செய்ய வேண்டும். மேலும் குடும்ப தலைவருக்கு அவர்களின் உறவு (மனைவி, மகன், மகள்) போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் போதுமானது.

TN Job “FB  Group” Join Now

  • பின்பு தாங்கள் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியானதா என்று பார்த்துகொண்டு, பதிவு செய் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு உங்கள் மின்னணு அட்டை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்று தகவல் வரும். மேலும் அதில் ஓர் குறிப்பு எண் வரும். இந்த எண் மூலம் மின்னணு அட்டையில் நிலைப்பாடு குறித்து அறிய முடியும்.
  • இதனை தொடர்ந்து தங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் போன்றவற்றினை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் விரைவில் உங்கள் அப்ளிகேஷன் பரிசீலிக்கப்படும்.
  • பின்பு சுமார் ஒன்று முதல் இரண்டு மாத காலத்திற்குள் பயனர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Please provide sugar card also get financial help.. We are also suffering lot during corona… Lasst time vardha puyal they gave rs 5000 for all not rice ration card only… So please provide sugar card get financial help. 🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!