ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை இணைப்பது எப்படி? முழு விவரங்களுடன்!

0
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை இணைப்பது எப்படி? முழு விவரங்களுடன்!
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை இணைப்பது எப்படி
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை இணைப்பது எப்படி? முழு விவரங்களுடன்!

புதிதாக திருமணமானவர்கள் கட்டாயமாக ரேஷன் கார்டில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். தற்போது எப்படி புதிய உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் இணைப்பது என்பது குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு:

நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட நான்கு வகையான ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இத்தகைய ரேஷன் கார்டுகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலும், இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதுமட்டுமல்லாமல், குடும்பத்தில் திருமணமாகி புதிதாக ஒருவர் வந்தாலும் கட்டாயமாக அவரின் பெயரையும் ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும். மேலும், பிரதமரின் PM kisan திட்டத்திலும் இணைய ரேஷன் கார்டு மிகவும் அவசியம். இதனால், அரசின் அனைத்து சலுகைகளையும் பெற விரும்புபவர்கள் கட்டாயமாக அவ்வப்போது ரேஷன் கார்டை அப்டேட் செய்துவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல், வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தாலும் கட்டாயமாக அந்த குழந்தையின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாகவே எளிமையாக ரேஷன் கார்டை அப்டேட் செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டது.

பானி பூரி விற்க தடை – நோய் பரவல் எதிரொலி! அரசு அதிரடி!

தற்போது புதிதாக திருமணமானவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். பின்பு, திருமணச் சான்று, கணவரின் ரேஷன் கார்டு, மனைவியின் பெயர் பழைய ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்ட சான்றிதழ், தாய்வழி ரேஷன் கார்டு மற்றும் தாய்வழி ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். மேலும், உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றும் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம். தற்போது எப்படி புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் இணைக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் https://tnpds.gov.in/home.xhtml என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும். பின்பு, முகப்புப் பக்கத்தில், புதிய உறுப்பினர் பெயரைச் சேர் பகுதியை கிளிக் செய்து உறுப்பினரின் பெயரை இணைத்துக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!