கமலின் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு? – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
கமலின் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு? - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கமலின் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு? - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கமலின் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு? – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைப்பக்கங்களில் ரேட்டிங் தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் திரைப்படம்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளாக கமல் திரைப்படம் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ரசிகர்கள் கமலின் திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாக இருப்பதால் திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பதட்டமான நிலையிலேயே ரசிகர்கள் இருந்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் மூன்று திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் விக்ரம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரே நாளில் 5 காட்சிகள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகள் காத்திருந்து நல்ல திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வெண்பாவை காப்பாற்றிய சாரதி, விவாகரத்து பற்றி வாக்குவாதம் செய்த சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஸ்பெஷல் ஷோவை பார்க்க காலை 4 மணிக்கு ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டு விக்ரம் திரைப்படத்தை பார்த்து உற்சாகத்துடன் சமூக வலைப்பக்கங்களில் விக்ரம் திரைப்படம் குறித்து கூறிவருகின்றனர். கமல் மற்றும் விஜய் சேதுபதியின் என்ட்ரி காட்சிகள் அனைத்துமே வேறு லெவலில் இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க விக்ரம் ஆக்ஷன் படமாக இருப்பதால் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு விருந்தாக இருக்கும் என கூறியுள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செய்திருப்பதாகவும் ரசிகர்கள் வர்ணித்துள்ளனர். சிறப்பு காட்சிகளில் சூர்யாவும் நடித்திருப்பதால் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here