இனி ஹோட்டல்களில் ‘இது’ செய்ய கூடாது – மத்திய அமைச்சர் உத்தரவு!

0
இனி ஹோட்டல்களில் 'இது' செய்ய கூடாது - மத்திய அமைச்சர் உத்தரவு!
இனி ஹோட்டல்களில் 'இது' செய்ய கூடாது - மத்திய அமைச்சர் உத்தரவு!
இனி ஹோட்டல்களில் ‘இது’ செய்ய கூடாது – மத்திய அமைச்சர் உத்தரவு!

இந்தியாவில் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான உணவகங்களில் அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக இதனை தடுக்க தற்போது ஒன்றிய அமைச்சர் பியூஷ் முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

சேவைக் கட்டணம்:

இந்தியாவில் பொதுவாக உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் இந்த சேவைக் கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு உணவகங்கள் வழங்கும் சேவைகள் பிடித்திருந்தால் மட்டுமே வழங்கலாம். இந்த சேவை கட்டணத்தை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் சில உணவகங்கள் கட்டாயமாக சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதாகவும் அத்துடன் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் புகார் எழுப்பினர்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தேசிய உணவகங்கள் சங்கத்திடம் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் தெரிவித்தாவது, சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமாக விரும்பி கொடுக்க வேண்டும். இதனை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் சில உணவகங்களில் சேவை கட்டணத்தையும் சேர்த்து பில் போடுகின்றனர். இது சட்டப்படி விரோதமாகும் என்றும் சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

அத்துடன் இந்த விதிமுறை அனைத்து உணவகங்களுக்கும் பொருந்தும் என்றும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் தெரிவித்துள்ளார். மேலும் உணவுகளுக்கான விலையையும் உரிய வரிகளையும் மட்டுமே செலுத்த வேண்டும். சேவை கட்டணத்தை கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உணவகங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டும் என்று நினைத்தால் அதற்கு உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் சேவை கட்டணத்தை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here