வெறும் 12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை – எந்த நகரத்தில் தெரியுமா?

0
வெறும் 12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை - எந்த நகரத்தில் தெரியுமா?
வெறும் 12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை - எந்த நகரத்தில் தெரியுமா?
வெறும் 12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை – எந்த நகரத்தில் தெரியுமா?

வடகுரேசியா நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்ய அந்த நாட்டின் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தையும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

லெக்ராட் நகரம்:

பலருக்கும் இன்று வரை கனவாக இருப்பது சொந்த வீடு. அதற்கான முயற்சிகளை அனைத்து தரப்பினரும் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் சதுரடி நிலம் தற்போது பல ஆயிரங்களாக இருந்து வருகின்றது. இப்படியாக இருக்க வடகுரோஷியா நாட்டில் உள்ள லெக்ராட் என்ற நகரத்தில் சதுர அடி நிலம் வெறும் 11 ரூபாய் 83 பைசாவிற்கு விற்கப்பட இருக்கிறது. இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழகத்தில் கருணை அடிப்படையில் அரசு பணிகள் – நியமனம் செய்யப்படும் வழிமுறைகள்!

வடகுரோஷியாவில் அமைந்துள்ள இந்த நகரம் 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. கடந்த 15 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் மிகவும் முக்கியமான நகரமாக திகழ்ந்துள்ளது. கூடுதலாக, மக்கள் தொகையில் 2 ஆம் இடத்திலும் இந்த நகரம் இருந்துள்ளது. ஆனால், சில காரணங்களால் பலர் லெக்ராட் நகரத்தில் இருந்து வேறு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக அந்த நகரத்தில் பல வீடுகள் காலியாகி உள்ளது. மக்களை மீண்டும் இங்கு வரவழைக்கும் நோக்கத்துடன் சதுரடி 12 ரூபாய் என்று அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக பல நிபந்தனைகளும் நகர நிர்வாகத்தினர் மூலமாக விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது ஜோடிகள் வீடுகளை வாங்கலாம். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் லெக்ராட் நகரத்தில் வசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகளை வாங்குபவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நன்றாக பணத்தினை செலவழிப்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!