அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை!

0
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை!
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளித்து விவசாயம் செய்வதற்கான விருப்பத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் இலங்கையில் உள்ள பொது மக்கள் பலரும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் இந்த நிலைக்கு அரசு தான் காரணம் என கருதிய மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷே பதவி விலகினார். இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!

அதாவது அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை அளித்து விவசாயம் செய்வதற்கான விருப்பத்தை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கை அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் இந்த விடுமுறை நாளை வீட்டு தோட்டம், உணவை பயிரிடுதல் போன்றவற்றுக்காக பயன்படுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

இந்த நடவடிக்கையை உறுதி செய்ய விவசாயத்துறையிடம் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனையை அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் குறைந்தபட்ச ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பது குறித்தும் அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கையின் சில அரசு அலுவலகங்கள் ஏற்கனவே தங்களது அலுவலகங்களை வெள்ளிக்கிழமை தோறும் மூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here