அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது. இந்த நிலையில் நாட்டில் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இலங்கையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அத்துடன் இதனை சரி செய்ய வேண்டுமென்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு 2 வாரங்களுக்கு தடை என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை: ஒரே நாளில் ஆபரண தங்கம் ரூ.160 உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையில் பொதுத்துறை அரசு ஊழியர்கள் 2 வாரம் வீட்டில் இருந்தபடியே பணி புரிய வேண்டும் எனவும் அத்துடன் சுகாதார பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவுவதால் பள்ளிகளை 2 வாரம் மூட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு நாட்டில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் மீண்டும் தற்போது பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது மாணவர்களின் கல்வி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.