ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

மாநிலத்தில் தற்போது கன்வர் யாத்திரை நடைபெற்று வருவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வரும் ஜூலை 25, 26 ஆகிய இரு நாட்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வான கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமர்சையாக நடைபெறும் இந்த கன்வர் யாத்திரை கடந்த 2 ஆண்டுகளுமே கொரோனா பரவலினால் நடைபெறவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் இந்த ஆண்டு கோலாகலமாக கன்வர் யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளில் இருந்து கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

Exams Daily Mobile App Download

தற்போதே லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையில் கலந்துகொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த யாத்திரையில் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான சிவபக்தர்கள் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பதினைந்து நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் வாள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

NICL நிறுவனத்தில் ஆண்டுக்கு 1 கோடி ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

இது மட்டுமல்லாமல் யாத்திரையின் காரணமாக சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், தெருக்களில் கூட்டம் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், ஐடிஐக்கள், 05 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் ICSE, CBSE வாரியத்தால் நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here