பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை விடுமுறை – அரசின் திடீர் அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை விடுமுறை – அரசின் திடீர் அறிவிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகவும் சிறப்பு நிகழ்வான கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளி விடுமுறை:

ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை என்கிற யாத்திரை நடைபெறுவது வழக்கம். அதாவது, இந்த யாத்திரையின் பொழுது கன்வாரியாக்கள் (யாத்ரீகர்கள்) ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்து செல்வது வழக்கம். பின்னர், இந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுகின்றனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த யாத்திரை நடைபெறவில்லை.

TNPSC Group 4 Revision Classes :14 மணிநேர தொடர்ச்சியான வகுப்புகள்: TNPSC Group 4 Exam Preparation Class

ஏற்கனவே இந்த யாத்திரையின் போது வாள்கள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதையும் மீறி இது போன்ற பொருட்களை கொண்டு வந்தால் எல்லையிலேயே அனைத்து பொருட்களும் கைப்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் 5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கன்வர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 26ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கண்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் யாத்திரை நடைபெறுவதற்கான சாலைகள் மூடப்பட சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here