முக்கிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாட காவல் துறையினருக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
முக்கிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாட காவல் துறையினருக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
முக்கிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாட காவல் துறையினருக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
முக்கிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாட காவல் துறையினருக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

டெல்லியில் காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு விடுமுறை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை:

அன்றாடம் ஓய்வில்லாமல் உழைக்க கூடிய துறைகளில் காவல் துறை முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும், குறிப்பாக நாட்டில் ஏதேனும் சிறப்பு நாட்கள், பண்டிகை நாட்கள், தேர்தல் இது போன்ற நாட்கள் வர இருந்தால் அவர்களுக்கு இரவும், பகலும் வேலை பளு இருக்கும். அதிலும், கடந்த ஆண்டு முதல் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு பரவி வருவதால் மாநில அரசுகள் முழு ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்தது. இதனால் காவல் துறையினர் முழுவதுமாக ஓய்வில்லாமல் உழைக்க தொடங்கினர்.

IPL 2021 – MI vs SRH: ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!

அவர்கள் முன்களப்பணியாளர்களாக களத்தில் போராடி மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டெல்லி காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், டெல்லி காவல்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பிறந்தநாள், திருமண விழாக்கள் மற்றும் வாழ்க்கையின் பிற முக்கிய நிகழ்வுகளுடன் நேரம் செலவழிக்க அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவின் ஒப்புதலுடன் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

இந்த அறிவிப்பினால் 80,000 காவல் துறையினர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினருக்கு அவர்களின் பிறந்த நாள், திருமண நாள், வாழ்க்கைத் துணைவரின் பிறந்த நாள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பிறந்தநாள் ஆகியவற்றுக்கு ‘ஒரு நாள் விடுமுறை’ வழங்கப்படும். அரசின் இந்த அறிவிப்பினை காவல் துறையினர் மிகவும் பாராட்டுகின்றனர். இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் முக்கிய நாட்களை தவறவிட்டுள்ளனர். இனி அதுபோன்ற சூழல் இருக்காது என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!