ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!
நாளை முதல் துவங்கும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் 9 நாட்களுக்கு செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை
ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள் என வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இன்றுடன் (ஜூலை 31) முடிவடையவுள்ள ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதில் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறையும் அடங்கும். இந்நிலையில் நாளை துவங்க உள்ள புதிய மாதத்தில் வங்கிகள் செயல்படும் நாட்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – விண்ணப்பம் வரவேற்பு!
அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்காட்டியின் படி, ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது மொஹரம், ஜன்மாஷ்டமி, பார்ஸ் புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதால் குறிப்பிட்ட பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
TN Job “FB
Group” Join Now
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் வருவதால் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தற்போது பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆகஸ்ட் 13 அன்று தேசபக்தர் தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மாநிலத்தில் வங்கிகள் செயல்படாது.
- ஆகஸ்ட் 16 பார்ஸ் புத்தாண்டை முன்னிட்டு மஹாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 19 மொஹரம் பண்டிகை காரணமாக திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 20, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 21 திருவோணம் பண்டிகை காரணமாக கேரள மாநிலத்தில் வங்கிகள் செயல்படாது.
- ஆகஸ்ட் 23 ஆம் தேதி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி காரணமாக கேரளா வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும்.
- ஆகஸ்ட் 30 ஜன்மாஷ்டமி தினத்தை முன்னிட்டு குஜராத், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
- ஆகஸ்ட் 31 ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.