தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஏப்.13ம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் இந்த பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கொரோனா எழுச்சி குறைந்து வருவதால், நடப்பு வருடம் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வு திருத்தேரோட்டம் ஆகும். இந்த தேரோட்டம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளில் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – இதற்காக தான்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மேலும் பிரம்மாண்டமாக 13 ஆம் தேதி நடைபெற உள்ள தேரோட்டம் காரணமாக தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், அடுத்த மாதம் 14 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இல் கீழ் வராது என்பதால், அரசு பணிகளில் எந்த இடையூறு இல்லாமல் மாவட்டக் கருவூலம், அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும் என தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!