தமிழகத்தில் அக். 6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

0
தமிழகத்தில் அக்.6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை - உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் அக்.6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை - உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் அக். 6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்கள் மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்த்து சுமார் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தற்போது வரை தேர்தல் தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்னும் வாக்குப்பதிவுகள் மட்டுமே மீதமுள்ளது.

தமிழகத்திற்கு ரூ.1,112 கோடி கடன் வழங்கல் – உலக வங்கி ஒப்புதல்!

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூர் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கோட்ட இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

அக்.3 முதல் அரசு அலுவலகங்கள் மீண்டும் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தேர்தலில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் தவறாமல் வாக்கு அளிக்கவும், 100% வாக்குகளை பதிவுகளை உறுதிப்படுத்தவும், கட்டட, கட்டுமானப் பணியாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் அளிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களை தெரிவிக்க 0416-2904953 மற்றும் 2254575 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here