அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மே 30 & 31 தேதிகளில் விடுமுறை?

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - மே 30 & 31 தேதிகளில் விடுமுறை?
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - மே 30 & 31 தேதிகளில் விடுமுறை?
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மே 30 & 31 தேதிகளில் விடுமுறை?

வரும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த இரண்டு நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இம்மாத இறுதியில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. அந்த வகையில், வங்கியில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளன. இதில் பெரிய அளவிலான கிளைகளை மூடுவது, முடிவெடுக்கும் செயல்முறைகளில் ஊழியர்களை புறக்கணிப்பது, பெரிய அளவிலான இடமாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

TN Job “FB  Group” Join Now

இப்போது, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஊழியர்களும் மே 30 அன்று வேலை நிறுத்தம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கத்தோலிக்க சிரியன் வங்கி, இந்தியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி, பெடரல் வங்கி மற்றும் யூகோ வங்கி ஊழியர்களும் கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மகாராஷ்டிரா ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளன (MSBEF) பொதுச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் கூறுகையில், ‘ஒவ்வொரு வங்கியையும் பாதிக்கும் சில போராட்டங்களால் ஒட்டுமொத்த வங்கித் துறையிலும் பெரும் துயரம் நிலவுகிறது.

TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்!

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக, வங்கிகள் பல வேலைகளை தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்யத் தொடங்கியுள்ளன. அனைத்து ஆட்சேர்ப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சில வங்கிகளில் இருதரப்பு தீர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இப்போது, வங்கித் துறையில் இருக்கும் மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்று ஆட்சேர்ப்பு தான். இதனை வலியுறுத்தி முழு அளவிலான போராட்டத்தை நடத்துவதற்கு நாக்பூரில் நடந்த யூகோ வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!